2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சித்தார்த் மல்லையாவின் கருத்துக்கு பெண்கள் அமைப்புக்கள் கண்டனம்

A.P.Mathan   / 2012 மே 20 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரரும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரருமான லூக் பொமர்பக் மீது குற்றஞ்சாட்டிய பெண்மணி மீது சித்தார்த் மல்லையா தெரிவித்த கருத்துக்களுக்கு பெண்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

லூக் பொமர்ஸ்பக் மீது குற்றஞ்சாட்டிய பெண் அதற்கு முன்னைய நாள் தன்னுடன் காணப்பட்டார் எனத் தெரிவித்திருந்த சித்தார்த் மல்லையா, தன்னுடைய பிளக்பெரி மெஸெஞ்சர் தனிப்பட்ட இலக்கத்தையும் அவர் கேட்டிருந்தார் எனவும், அவரது கருத்துக்கள் பிழையானவை எனவும் ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் நிர்வாகியும், தொழிலதிபருமான சித்தார்த் மல்லையா தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்களுக்குப் பதிலளித்துள்ள பெண்கள் அமைப்புக்கள், இவ்வாறான மோசமான கருத்துக்கள் இந்த நாட்டில் அனுமதிக்கப்படக்கூடாது எனவும், அந்த நபர் யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளன.

அத்தோடு இந்தியாவிலுள்ள பெண்கள் அனைவரிடமும் சித்தார்த் மல்லையா மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் கோரியுள்ளன.

பெண்ணொருவரின் தொழில் எதுவாகக் காணப்பட்டாலும், அவரது தனிப்பட்ட குணம் எவ்வாறு காணப்பட்டாலும், அவரது பின்புலம் எவ்வாறு காணப்பட்டாலும், ஒரு பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள அமைப்புக்கள், சித்தார்த் மல்லையாவின் கருத்துக்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

பெண்களை இழிவுபடுத்துவதன் மூலம் அவரும் குற்றத்தில் பங்குவகிக்கிறார் எனத் தெரிவித்துள்ள அவ்வமைப்புக்கள், அவரது அணியைச் சேர்ந்த ஒருவர் தவறு செய்தார் என்பதற்காக அவரைக் காக்க முனைவாரானால் சித்தார்த் மல்லையாவும் குற்றவாளி என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளன. (க்ரிஷ்)

  Comments - 0

  • ramya Sunday, 20 May 2012 07:14 AM

    உனது அப்பா பனத்தை வைத்து பெண்களை அவமானப்படுத்தாதே...
    உனது அம்மாவும் ஒரு பெண் என்பதை மனதில் வைத்துக்கொள்.

    Reply : 0       0

    mursith Monday, 21 May 2012 09:22 AM

    அப்பா பனத்தை வைத்து பெண்களை அவமானப்படுத்தாதே...
    உனது அம்மாவும் ஒரு பெண் என்பதை மனதில் வைத்துக்கொள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .