2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இராணுவத்தில் சேவையாற்ற ஆர்வமாக உள்ளேன்: டோணி

A.P.Mathan   / 2012 ஜூன் 02 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதும் இராணுவத்தில் இணைந்து சேவையாற்ற ஆர்வத்துடன் உள்ளதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவரும், கௌரவ இராணுவ நிலையைக் கொண்டுள்ளவருமான மகேந்திரசிங் டோணி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் துணை நிலை கேர்ணலாகக் கௌரவ பதவி வழங்கப்பட்ட மகேந்திரசிங் டோணி,  தற்போது ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து ஜம்மு பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள கள நிலைமைகளைப் பார்வையிட்டார்.

தனது கிரிக்கெட் காரணமாகவே தனக்கு இந்த கௌரவம் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்த மகேந்திரசிங் டோணி, தனது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதுடன் இராணுவத்திற்குச் சேவையாற்ற விரும்புவதாக அங்கு குறிப்பிட்டார்.

தனது கிரிக்கெட் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிவித்த டோணி, தான் சிறந்து விளங்குவதில் கிரிக்கெட் முக்கியமானது எனத் தெரிவித்தார். எனவே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதும் இராணுவத்தில் இணைந்து சேவை செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

முன்னரங்கக் களத்துக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்த மகேந்திரசிங் டோணி, அங்கு செல்வது மிகவும் சுவாரசியமானது எனத் தெரிவித்தார். அங்குள்ள அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களைத் தான் அறிவேன் எனத் தெரிவித்ததோடு, இதுவரை காலமும் இராணுவத்தைத் தொலைவிலிருந்தே கவனித்ததாகவும், இப்போது தான் நேரடியாக அவர்களைக் காண சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். (க்ரிஷ்)

  Comments - 0

  • sifanALM Sunday, 03 June 2012 04:33 AM

    cricketle heli anuppi mudinchi ,ippe jet anuppeyakkum

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .