2025 மே 02, வெள்ளிக்கிழமை

பிரபல ஹொலிவூட் இயக்குநர் டொனி ஸ்கொட் தற்கொலை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹொலிவூட் திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான டொனி ஸ்கொட், லொஸ் ஏன்ஜல்ஸ் நகரில் உள்ள பாலமொன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஹொலிவூட்டின் பிரபல திரைப்படங்களான டொப் கன், டேய்ஸ் ஒப் தண்டர், பேர்வலி ஹில்ஸ் கோப் 11 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் (வயது 68) நேற்று ஞாயிற்றுக்கிழமை லொஸ் ஏன்ஜல்ஸில் உள்ள வின்ஸ்ன்ட்  தோமஸ் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவரிடம் தற்கொலை குறிப்புகள் எதுவும் காணப்படவில்லையெனவும் பாலத்தின் கிழக்கு பகுதியில் சடலம் ஒதுங்கியிருந்ததாகவும் அமெரிக்க கரையோர பாதுகாப்பு படை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனிபர் ஒஸ்பர்ன் தெரிவித்துள்ளார்.

ஏலியன் திரைப்படத்தின் இயக்குநரான ரெட்லி ஸ்கொட்டின் இளைய சகோதரரே டொனி ஸ்கொட் ஆவார். இவர் டொப் கன் திரைப்படத்தினூடாக ஹொலிவூட்டின் முதல்தர அக்ஷன் இயக்குநர் என்ற பெயரை பெற்றுக்கொண்டார். இதன் மூலம் டொம் குருஸை  நட்சத்திர நடிகராக்கினார்  டொனி ஸ்கொட்.

ரொபர்ட் டி நிரோ, டென்ஸெல் வொஷிங்டன், பிரெட் பிட் மற்றும் வில் ஸ்மித் போன்ற நடிகர்களின் திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X