2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பொலிவூட் நடிகை ஜியா கான் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 04 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகை ஜியா கான் இந்தியாவின் மும்பை நகரிலுள்ள அவரது வீட்டில் உயிரிழந்து காணப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

25 வயதான நடிகை ஜியா கான் பொலிவூட் படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். 

மேலும், முதன்முதலாக 2007ஆம் ஆண்டு நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக திரையுலகில் நுழைந்த இவர், நடிகர்களான அக்ஷய் குமார், அமீர்கான் ஆகியோருடனும் நடித்துள்ளார்.

அண்மைக்காலமாக சொந்தப் பிரச்சினைகள் காரணமாக இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .