2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

உலகில் கவர்ச்சிகரமான பெண்ணாக ஹொலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தெரிவு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சிகரமான பெண்ணாக ஹொலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எஸ்கொயர் சஞ்கிகையானது உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் யார் என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், 28 வயதுடைய ஹொலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு உலகின் கவர்ச்சிகரமான பெண்ணாக இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்கார்லெட்டின் முன்னாள் கணவரும், நடிகருமான ரயன் ரேனால்ட்ஸ் உலகின் கவர்ச்சிகரமான ஆணாக கடந்த 2010ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஸ்கார்லெட் இந்த பட்டத்தை இரண்டு முறை வென்ற ஒரே பெண் நான்தான் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .