2025 நவம்பர் 13, வியாழக்கிழமை

ரூ.4,577 மில்லியனை சம்பளமாக பெறும் 'ஸ்னோ வைட்' நடிகை

Menaka Mookandi   / 2012 ஜூன் 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவின் பிரபல சினிமா சஞ்சிகையான போர்ப்ஸ், ஹொலிவூட் நடிகைகளின் சம்பள பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கிறிஸ்டன் ஸ்டீவர்ட் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடம் பெற்றுள்ளார்.

அண்மையில் வெளியான 'ஸ்னோ வைட் அன்ட் தி ஹன்ட்ஸ்மன்' ஹொலிவூட் திரைப்படத்தின் கதாநாயகியாக கிறிஸ்டன் ஸ்டீவர்ட் நடித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2012 மே மாதம் வரை இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் 34.5 மில்லியன் அமெரிக்க டொலராகும் (4,577 மில்லியன் ரூபா). இவருக்கு அடுத்த இடத்தில் நடிகை கெமரன் டயஸ் உள்ளார்.

22 வயதாகும் கிறிஸ்டன் 'டுவைலைட்' திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் அவரது சம்பளம் கணிசமாக அதிகரித்ததாக குறிப்பிடப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X