Editorial / 2018 ஜூலை 10 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியே ஏதெனும் ஒரு சத்தம் பிடிக்காமல் இருக்கும். அந்த சந்தத்தினை கேட்கும்பொழுதே பயங்கரமான கோபம் வரும். அந்த அளவிற்கு அந்த சத்தம் நம்மை மிகவும் சோதித்து பார்க்கும்.
ஒரு சிலருக்கு வெளியில் நடந்து செல்லும்போது காரில் இருந்து எழும் ஹார்ன் சத்தம் சுத்தமாக பிடிக்காது.,என்ன தான் மெல்லிசை பாடல்கள் ஒருவருக்கு மன அமைதியை தரும் என கூறினாலும், ஒரு சில நேரங்களில் அதன் ஒலி கூட வெறுப்பை தரும்.
அமைதியாக இருக்கும்பொழுது நாற்காலியை யாராவது நகற்றினால்இ அப்பொழுது எழும் சத்தம் அப்படியே உடல் முழவதும் புல்லரிப்பை தரும்.
இதனை போன்றே கையில் இருக்கும் நகத்தால் சுவற்றில் வைத்து தேய்த்தாலும் அளவு கடந்த கோபம் வரும்.
இதனை எல்லாம் தாண்டி இரவு நேரத்தில் எந்த சத்தமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம் என நினைத்தால் அப்பொழுது தான் ஆரம்பிக்கும் குறட்டை எனும் பெரும் தொல்லை.
குறட்டையை எழுப்புபவன் நன்கு உறங்குவான். ஆனால் அதை கேட்பவன்இ நிம்மதியின்றி இரவு முழுவதும் பைத்தியமாகிவிடுவான்.
இது போன்று இன்னும் ஏராளமான சத்தங்கள் மனிதனுக்கு எரிச்சலை தரக்கூடிய பட்டியலில் உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் விட மனிதனுக்கு அதிக எரிச்சலை தரக்கூடிய ஒன்று எது என்பதை நேஷனல் ஜியோகிராபிக் ஊடகத்தை சேர்ந்த சிலர் அறிவியல் பூர்வமான விளக்கத்தை கொடுத்து தெரியப்படுத்தியுள்ளார்.
அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு குழாயிலிருந்து ஒவ்வொரு சொட்டாக கீழே விழும்இ நீர்குமிலே மனிதனுக்கு மிகுந்த எரிச்சலை தரக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விளக்கும் விதமாக ஏராளமான காமிராக்களை பொருத்தி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago