Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2023 ஜூன் 29 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது காதலியுடன் விளையாட அந்தரங்க உறுப்பில் பூட்டு போட்ட நபர் அதை திறக்க முடியாமல் சுத்தியல் வைத்து உடைத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் ஒரு நபர் தனது காதலிக்காக தனது அந்தரங்க உறுப்பை பூட்டு போட்டு பூட்டி பின்னர் ஆபத்தில் மாட்டிக்கொண்டார். பின்னர் அந்த பூட்டை சுத்தியல் வைத்து உடைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.
இந்த வினோத சம்பவம் லா டுர்டா பியர்சர் (La Tuerta Piercer) என்ற டாட்டூ கலைஞரின் டிக் டாக் வீடியோ மூலம் வெளிவந்து வைரலாகியுள்ளது. காதலின் உச்சத்தில் காதலர்கள் வித விதமான விளையாட்டுகளில் ஈடுபடுவதை நாம் கேள்விபட்டிருப்போம். அப்படித்தான் ஸ்பெயினின் பார்சிலேனாவைச் சேர்ந்த நபர் தனது பார்ட்னருடன் செக்ஸ் கேம் விளையாடும் விதமாக பூட்டு ஒன்றை வாங்கி வந்துள்ளார்.
அந்த பூட்டை வைத்து தனது அந்தரங்க உறுப்பை பூட்டி அந்த சாவியை காதலியிடம் கொடுத்துள்ளார். இருவருக்கும் விருப்பம் ஏற்படும் போது மட்டும் சாவியை வைத்து திருந்து இருவரும் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். 8 மாதங்களுக்கு முன்னர் இவர் தனது உறுப்பை பூட்டிய நிலையில், இந்த ஜோடிக்கு இடையே சண்டை வெடித்து இருவரும் பிரிந்து சென்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த பிரிவு ஏற்பட்ட நிலையில், காதலி அந்த சாவியை தராமல் விட்டு சென்றுள்ளார். வேறு வழியின்றி சுமார் 3 மாதம் பூட்டுடன் அந்த நபர் தவித்து திரிந்த நிலையில், ஒரு கட்டத்தில் தனது காதலிடம் மன்றாடி சாவியையும் வாங்கிவிட்டார் அந்த நபர்.
ஆனால், அந்த பூட்டில் துரு பிடித்துவிட்டதால் சாவியை வைத்து திறக்க முடியவில்லை. எனவே தான் தனக்கு தீர்வு கிடைக்க டாட்டூ கலைஞர் லா டுர்டா பியர்சர் இடம் சென்றுள்ளார். அந்த பெண் பூட்டை ஆராய்ந்து பார்த்து இது நன்றாக துரு பிடித்தாதல் திறப்பது கடினம் எனக் கூறி சிறிய சுத்தியல் வைத்து பாதுகாப்பாக உடைத்துள்ளார்.
தன்னை பூட்டில் இருந்து விடுவித்த டாட்டூ கலைஞருக்கு அந்த நபர் நன்றி தெரிவித்துள்ளார். அந்த நபரின் அடையாளத்தை டாட்டூ கலைஞர் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தை அவர் டிக்டாக் வீடியோவாக பகிர்ந்த நிலையில், 22 லட்சம் பேர் இதை பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கான கமெண்டுகள் பதிவிடப்பட்டு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
45 minute ago
1 hours ago