2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அன்னாசி பழத்தின் விலை ரூ.1 லட்சம்

Editorial   / 2022 டிசெம்பர் 11 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், மாங்கனீஸ், பொட்டாஷியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இது, உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த பழமாக திகழ்கிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் இதை உண்ணும்போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக இங்கிலாந்தின் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழம் உள்ளது. இதன் ஒன்றின் விலை 1,000 பவுண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

நம்ம ஊர் ரூபாய் மதிப்பில்   அன்னாச்சி பழமொன்றின் விலை 1 லட்சம்  ஹெலிகான் அன்னாசி பழம் 1819 ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், தோட்டக்கலை வல்லுநர்கள் நாட்டின் தட்பவெப்பநிலை அன்னாசி சாகுபடிக்கு ஏற்றபடி இல்லை என்பதை உணர்ந்திருந்தனர். இதனால், அவர்கள் அவற்றை சாகுபடி செய்வதற்கான பிரத்யேக வழிமுறைகளை உரு வாக்கினர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X