Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயர்லாந்தின், கோர்க் நகரிலுள்ள பாடசாலையொன்றில், இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் இடம்பெறுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை ஆராய்வதற்காக, பாடசாலையில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காணொளி அவதானிக்கப்பட்டபோது, அதிர்ச்சிகள் பல காத்திருந்தன. அந்தக் காணொளியில், கதவுகள் திறந்து மூடப்படுவதும், புத்தக இறாக்கைகள் திறந்து மூடுவதுமாக இருந்துள்ளன. அதுமாத்திரமல்லாது, தளபாடங்களும் அசைந்துள்ளன.
இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
இவ்விடயம் பற்றி, பாடசாலையின் அதிபர் கெவின் பெரி குறிப்பிடுகையில், “ஏன் இவ்வாறு நடைபெறுகிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. பேய்,பிசாசுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. சில நாட்களில், ஆசிரியர்களால் அழைத்துவரப்படும் செல்லப்பிராணிகளை பாடசாலைகளிலேயே விட்டுச் செல்கின்றனர். சில வேளைகளில் அவற்றின் நடவடிக்கையும் காரணமாக இருக்கலாம்” என்றார்.
எனினும் இது பாரதூரமான விடயம் என்றும் விரிவாக ஆராயப்பட வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
29 minute ago
47 minute ago