Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜனவரி 17 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களின் போனிடேல் சிகை அலங்காரம் என்பது ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சிகை அலங்காரத்துக்கு 2 நாடுகள் தடை விதித்துள்ளன.
ஆண், பெண் யாராக இருந்தாலும் கூட, தங்களுக்கு பிடித்த சிகை அலங்காரத்தை செய்து கொள்கிறோம். இருப்பினும் பெண்களின் சிகை அலங்காரம் ஒன்று ஆண்களுக்கு பாலூணர்வை தூண்டும் என கூறப்படுகிறது
அதாவது பெண்கள் தங்களின் முகத்துக்கு ஏற்ப சிகை அலங்காரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் மத்தியில் இருக்கும் ஒரு சிகை அலங்காரம் தான் போனிடேல். அதாவது குதிரை வால் ஹேர்ஸ்டைல்.
இந்த ஹேர்ஸ்டைல் என்பது ஆண்களுக்கு பாலூணர்வை தூண்டும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகாத நிலையிலும் கூட இந்த கருத்து என்பது நம்பப்பட்டு வருகிறது.
அதாவது பெண்கள் போனிடேல் சிகை அலங்காரம் செய்யும்போது அவர்களின் கழுத்து என்பது வெளியே தெரியும். இது ஆண்களுக்கு பாலியல் உணர்வை தூண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் தான் சில நாடுகளில் இந்த போனிடேல் ஹேர்ஸ்டைல் என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜப்பான் மற்றும் வடகொரியாவில் இந்த போனிடேல் ஹேர்ஸ்டைலுக்கு தடை உள்ளது.
ஜப்பானை பொறுத்தமட்டில் பாடசாலை மாணவ - மாணவிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் ஒரு கட்டுப்பாடாக போனிடேல் அணியக்கூடாது என்பதாகும்.
இதற்கமைய, ஜப்பானில் குறித்த நடைமுறைக்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அதாவது பெண் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆண்களின் பார்வையை மாற்ற வேண்டுமே தவிர பெண்களின் சிகை அலங்காரத்தை அல்ல என அவர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும் கூட ஜப்பான் நாட்டில் இன்று வரை போனிடேல் சிகையலங்காரத்தில் மாணவிகள் செல்ல தடை நீடிக்கிறது. அதேபோல் மர்மதேசமான வடகொரியாவிலும் பெண்கள் போனிடேல் சிகை அலங்காரம் செய்யக்கூடாது. கிம் ஜாங் உன் அதிபராக உள்ள அந்த நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருதரப்பினரும் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஹேர்ஸ்டைல் வைத்திருக்க முடியாது.
குறிப்பிட்ட ஹேர்ஸ்டைல்களை தனித்தனியே ஆண்கள், பெண்களுக்கு அந்நாட்டு அரசு வழங்கி உள்ளது. அதில் ஒன்றை தான் இருபாலினத்தவரும் வைத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வடகொரியாவிலும் பெண்கள் போனிடேல் ஹேர்ஸ்டைல் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
14 minute ago
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
3 hours ago