2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆழ்கடலில் புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு

Editorial   / 2018 ஜூன் 04 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் நடத்திய ஆய்வில் புதிய உயிரினங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களை கண்டுபிடிப்பதற்காக சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சக்தி வாய்ந்த கேமரா பொருத்தப்பட்ட தூண்டில்களை கடலில் ஆழம் வரை இறக்கி ஆய்வு செய்தனர். இதன்போது, துாண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் கேமராவில் பதிவாகின. அவற்றில் 30 வகையான உயிரினங்கள் புதிதாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து,கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் சர்வதேச கடல் ஆணைய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆய்வில் கண்டறியப்பட்ட 30 புதிய உயிரினங்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் பலவகை மீன்கள் இடம்பெற்றிருந்தன.

அவற்றில் செந்நிற இறால்கள், பாம்பு வடிவ ஈல் மீன்கள், பெரிய கண்களுடன் விமானம் போன்று காட்சி தரும் அரிய வகை மீன்கள் எனப் பலவகை மீன்கள் கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X