Mayu / 2024 ஜனவரி 04 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் 18 வயது மாணவி ஒருவர்,வினோதமான ஒரு செயலை செய்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளார்.
தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள விலங்குகள் தான் அதன் எதிரிகளை தாக்கும் இல்லையெனில், பழிவாங்குவதற்காக காத்திருக்கும் என பலரும் கூறுவார்கள்.
அந்தவகையில் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வூசிச் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவியொருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் விடுதியில் தன்னுடைய அறையில் இருந்தபோது, அவரை எலி ஒன்று கடித்துள்ளது. இதனால் அந்த மாணவி அதிக வலியால் துடித்துள்ளார்.

இதனையடுத்து அதைப் பழிவாங்க நினைத்த அந்த மாணவி தன்னைக் கடித்த எலியைப் பிடித்து அதன் கழுத்தைக் கடித்து, தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டார்.
அந்த மாணவியின் வெறித்தனமான கடியால் அந்த எலி பரிதாபமாக உயிரிழந்தது.
எலி கடித்ததில் காயம் அடைந்த அந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய இந்தச் செயலைக் கண்டு வைத்தியர்களே அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மாணவிக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு மாணவி நலமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago