Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 மே 19 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி கற்பதற்கு வயது தடையில்லை என ஒரு பழமொழி உள்ளது. அந்த பழமொழியை நடைமுறைப்படுத்தியுள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷகுன் விஸ்வகர்மா என்ற பெண், மத்திய பிரதேசத்தில் உள்ள மால்தான் என்ற கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார்.
அவர் கிட்டத்தட்ட 25 ஆண்டு கால இடைவெளிக்கு பின் தனது படிப்பை தொடர்ந்துள்ளார். தற்போது அவருக்கு வயது 40. இதில் சிறப்பு என்னெவென்றால் ஷகுனின் மகளும் அதே கல்லூரியில் தான் படிக்கிறார். தாயும் மகளும் தினமும் ஒன்றாக கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
ஷகுன் பிறந்து வளந்த கிராமத்தில் வெறும் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடங்கள் இருந்துள்ளன. இதன் காரணமாக அவரால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. திருமணத்திற்கு பிறகு அவர் மாமியார் வீட்டிற்கு சென்றபோது,படிப்பறிவு இல்லாததால் ஷகுனை அனைவரும் இழிவாக நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இது குறித்து ஷகுன் தனது குடும்பத்திடம் தெரிவிக்க அவர்களும் அதை வரவேற்றுள்ளனர். பின்னர் 8 ஆம் வகுப்பு சேர்ந்த ஷகுன் தனது மகளுடன் ஒரே வகுப்பில் படித்துள்ளார். இவ்வாறு 5 ஆம் வகுப்பில் பாதியில் நின்றுப்போன படிப்பை தொடர்ந்த ஷகுன், தற்போது பிஏ படித்து வருகிறார். அதுமட்டுமன்றி அவர் மேற்படிப்பை தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஷகுனின் மகள் விஸ்வகர்மா, பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். தனது தாய் மிகவும் நன்றாக படிப்பார் என அவர் தெரிவித்துள்ளார். தேவைப்படும்போது அம்மாவின் படிப்புக்கு உதவி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
5 ஆம் வகுப்பில் படிப்பை விட்ட பெண், கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து இத்தனை ஆண்டுகள் கழித்து படிப்பை தொடர்வது வரவேற்பை பெற்றுள்ளது.
32 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago