Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளவுடன் சூரிய ஒளி உடம்பில் படுவது, ஆரோக்கியத்துக்கு நல்லது என்பார்கள். ஆனால் தன் குழந்தையை சூரிய ஒளியே அண்டவிடாமல் பாதுகாத்துவருகிறார் தாயொருவர். இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் நிவ் சவுத் வேல்ஸ் பகுதியில் தான் நடக்கிறது.
மொன்ரோ எனும் 5 வயதே நிரம்பிய சிறுமியொருவர், சூரிய ஒளியினால் உடல் முழுவதும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றார். இச்சிறுமியின் சருமத்தில் புற ஊதாக் கதிர்கள் படியும்போது, ஒவ்வாமை தன்மை ஏற்பட்டு உடல் முழுவதும் புண்கள் ஏற்படுகின்றன. இதனால் இச்சிறுமி வெளியில் செல்லும் போது, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கூடிய, உடல் முழுவதும் மூடிய உடையையே அணிவித்து அனுப்புகிறார் இவரின் தாய்.
இது பற்றி சிறுமியின் தாய் சாரா மில்ஸ், “என் குழந்தையின் உடலில் சில நிமிடங்களே சூரிய ஒளி பட்டால் கூட, தலைவலி, மூட்டுவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, ஒளி பட்ட இடத்தில் புண்கள் தோன்றி மிகவும் துன்பப்படுவாள். இதனால் அவளை மிகவும் அவதானமாக பாதுகாக்கவேண்டியது அவசியம். உலகிலேயே சூரிய ஒளியால் ஒவ்வாமையைச் சந்தித்துவரும் இருவரில், என் குழந்தையும் ஒருத்தி” என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .