2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு கொசுவை ஒழிக்க கொசு வளர்க்கும் நாடு

Editorial   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

‛முள்ளை முள்ளால் எடு' என்பது பழமொழி. அதேபோல் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்களை ஒழிக்க பிரேசில் நாட்டில் விநோத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பை ஏற்படுத்தாத கொசுக்களை உற்பத்தி செய்ய பிரேசிலில் தனி பயோ தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு டெங்கு பாதிப்பை ஏற்படுத்தாத கொசுக்களை எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? அதன் பின்னணி என்ன? என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா உள்பட பல நாடுகளில் டெங்கு காய்ச்சலால் ஏாளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு பாதிப்பில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த டெங்குவால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் பிரேசிலும் ஒன்றும்.

 

பிரேசில் நாட்டை எடுத்து கொண்டால் அங்கு 21.2 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரேசிலில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 66 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதில்6,297 பேர் பலியாகினர்.

பிரேசிலை பொறுத்தவரை டெங்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் தான் டெங்குவதை தடுக்க பிரேசில் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அது என்னவென்றால் டெங்குவை பரப்பாத கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. பிரேசிலில் உள்ள குரிடிபா (Curitiba) நகரில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் Wolbito do Brasil ஆகும்.

பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம், உலக கொசு திட்டத்துக்கான Oswaldo Cruz அறக்கட்டளை மற்றும் Institute of Molecular Biology of Parana ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த ஆலை திறக்கப்பட்டுள்ளது. இங்கு வாரத்துக்கு 100 மில்லியன் (10 கோடி) கொசு முட்டைகளை உற்பத்தி செய்ய முடியும். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X