Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெக்ஸாஸ், உயர்நிலைப் பள்ளியொன்றில், மாணவர் இரண்டு பேர், ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டிருக்க, அதனைத் தடுக்காமல், வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அக்காட்சியை படம்பிடித்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை உள்ளடக்கிய வீடியோ பதிவொன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவிகொண்டிருக்கிறது.
அந்த வீடியோ பதிவில், உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் பலமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இதனைத் தடுக்க முன்வராமல், தன் கையடக்க தொலைபேசியில் அதனைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார் பொறுப்பாசிரியர் ஒருவர்.
இது பற்றிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பலர் இந்த ஆசிரியருக்கு எதிராக கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அவர் செய்த செயலானது மாணவர்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டக் கூடிய செயற்பாடு என்பதோடு, மாணவர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் எனக் கூறி, மாணவர்களும், பொதுநலவிரும்பிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் ஆசிரியர் மற்றும் பள்ளி பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago