Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
குரங்கொன்று நாய்க்குட்டியொன்றை மூன்று நாட்கள் கடத்தி வைத்திருந்த விநோத சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
மலேசியாவின் சிலங்ஹொர் மாகாணம் தமன் லெஸ்டரி புட்ரா பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்த்து வந்த 2 மாதங்களே ஆன நாய்க்குட்டியொன்றை கடந்த வியாழக்கிழமை அங்கு சுற்றித்திரிந்த குரங்கொன்று தூக்கிச்சென்று மரக்கிளைகளில் மறைத்து வைத்திருந்தது.
பின்னர் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் அந்நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மீட்புக்குழுவினர் அங்கு வந்து குரங்கின் பிடியில் சிக்கிய நாய்க்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதும் மீட்புப் பணியானது தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.
மூன்று நாட்கள் கடந்த நிலையில் , நாய்க்குட்டி மிகவும் சோர்வு அடைந்திருந்ததால் இறுதியில் அக்குரங்கு தனது பிடியில் இருந்து நாய்க்குட்டியை விடுவித்துள்ளது.
இந்நிலையில் மரக் கிளையில் இருந்து கிழே விழுந்த நாய்க்குட்டியை மீட்புப்பணியில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு அந்நாய்குட்டிக்கு சிகிச்சை அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது குழந்தை என எண்ணியே குரங்கு இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என விலங்கு நல ஆர்வளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago