Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக, வேற்றுகிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கலிபோர்னியாவிலுள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை (SETI) தேடும் திட்ட அமைப்பு, வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பு செயற்கை சமிக்ஞைகள், வானொலி அலைகள் மற்றும் விண்வெளியில் மேம்பட்ட வாழ்க்கைக்கான ஆதாரம் ஆகியவற்றுக்காக 1,300க்கும் மேற்பட்ட அந்நிய நட்சத்திரங்களை SETI ஸ்கேன் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
10,73,741,824 மெகாபைட் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது 1,600 ஆண்டுகள் தொடர்ந்து இசை கேட்கக் கூடிய தகவல் கொள்ளளவு ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுகிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளதாக திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நாசா, ரஷ்ய நாட்டை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிலையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தான் வேற்றுகிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தகவல்கள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.
பூமியை விட்டு மிக தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து கிடைத்துள்ள குறித்த சமிக்ஞைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
05 Dec 2025
05 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
05 Dec 2025
05 Dec 2025