2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மரத்திலேறி தப்பிய காட்டு ராஜா

Ilango Bharathy   / 2021 ஜூன் 10 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கமொன்று காட்டெருமையிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தப்பியோடி ஒரு உயரமான மரத்தில் ஏறிய சம்பவம்,  கென்யா  மொசாய்மாரா காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 இச் சிங்கம் எருமையை வேட்டையாடவே அதனை நோக்கிச் சென்றுள்ளது. ஆனால் அதன் நோக்கம் பிழையாகிப் போய்விட்டது.

சிங்கம் தன்னை நோக்கி வருவதைக் கண்ட எருமை தனது கூட்டத்துடன் சேர்ந்து அதனை துரத்த ஆரம்பித்தது. இதனால் பயந்துபோன சிங்கம் ஓடிச் சென்று ஓர் உயரமான மரத்தில் ஏறிக் கொண்டது.

நோர்வேயைச் சேர்ந்த படப்பிடிப்பாளர் ஒலவ் தொக்லே,இந்த அரிய காட்சியை தனது கெமராவுக்குள் அடக்கிக் கொண்டார்.

அத்துடன்  ”அந்த ஒற்றை மரத்தில் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக சுமார் ஒரு மணித்தியாலம் வரை அதாவது எருமைக் கூட்டம் அங்கிருந்து போகும் வரை அச்சிங்கம் மரத்திலேயே இருந்ததாகவும்” அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .