2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மீம் கிரியேற்றருக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம்

Ilango Bharathy   / 2023 மார்ச் 26 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரைச்  சேர்ந்த  `ஸ்டாக்க்ரோ`  என்ற நிறுவனமானது, தமது நிறுவனத்திற்கு தலைமை மீம் அதிகாரியொருவரைத் தேடி வருவதாக அறிவித்துள்ளது.

 இப்பணியில்  அமர்த்தப்படுபவர்களுக்கு  மாதம்  4 லட்சம் ரூபாய்(இலங்கை மதிப்பில்)  சம்பளமாக வழங்கப்படுமெனவும், மேலும், வீட்டிலிருந்தே  பணிபுரியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ‘அஜய் லகோதா‘ கருத்துத் தெரிவிக்கையில் ” மீம் கிரியேற்றர்கள் மூலம் எங்களால் வாடிக்கையாளர்களுடன் தொடர்பை இலகுவாக ஏற்படுத்த முடியும், இதன் விளைவாக புதிதாக வருபவர்கள் எங்கள் தளத்தை ஆராய்ந்து பார்க்க விரும்புவார்கள்.

 அத்துடன் இந்நிறுவனத்தை உற்சாகமாக வைத்திருக்கும் கடமை மீம் கிரியேற்றர்களுக்கு உள்ளது. மீம்களின் மாயாஜாலத்தைக் காண ஆர்வமாக இருக்கின்றோம்"  இவ்வாறு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X