2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

வகுப்பறையில் சகமாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

J.A. George   / 2021 நவம்பர் 10 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு பாடசாலை வகுப்பறையில் மாணவர் ஒருவர் சகமாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம்  களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் அமைந்துள்ளது அரச மேல்நிலை பள்ளி. 

இந்த பள்ளியில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் தன்னுடன் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு நண்பர்களின் வற்புறுத்தல் பேரில் தாலி கட்டியுள்ளார்.

மாணவன் மாணவிக்கு தாலி கட்டும் போது சக மாணவர்கள் காகிதங்களை கிழிந்து அவர்கள் மீது மலர்கள் போல தூவி வாழ்த்தியும் உள்ளனர். 

இதை உடன் இருந்த மாணவர் ஒருவர் அலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X