Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 01 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான ஓடுபாதை அமைக்கப்பட்டு இருந்த இடத்தை அபகரித்து தாயும், மகனும் விற்பனை செய்துள்ளனர். அவர்களின் மோசடி 28 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலாமான நிலையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
பஞ்சாப் மாநிலம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு மிகவும் அருகில் ஃபட்டுவாலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த இடத்தை டம்னிவாலா கிராமத்தை சேர்ந்த உஷா அன்சால்,என்ற பெண் தனது மகன் நவீன் சந்த் உடன் சேர்ந்து விற்பனை செய்துள்ளார். இடத்துக்கான ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்து அந்த இடத்தை உஷா, நவீன் ஆகியோர் கைப்பற்றினர். இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உதவி செய்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் தான் ஆவணங்களை போலியாக உருவாக்கி உள்ளனர்.
அதன்பிறகு 1997 ம் ஆண்டில் இந்த இடத்தை உஷா - நவீன் விற்பனை செய்தனர். சுர்ஜித் கவுர், மன்ஜித் கவுர், முக்தியார் சிங், ஜாகீர் சிங், தாரா சிங், ரமேஷ் காந்த் மற்றும் ராகேஷ் காந்தி ஆகியோரின் பெயர்களுக்கு பத்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதனை ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரி நிஷான் சிங் கண்டுப்பிடித்தார்.
இதுதொடர்பாக அவர் போலீசில் புகாரளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு அந்த நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் இத்தகைய மோசடி தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறிய உயர்நீதிமன்றம் அதன் மீது நடவடிக்கை எடுக்காத பெரோஸ்பூர் கலெக்டரை கண்டித்தது. அதுமட்டுமின்றி புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க பஞ்சாப்பின் விஜிலென்ஸ் தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
14 minute ago
35 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
35 minute ago
39 minute ago