Kogilavani / 2017 மே 24 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீன நாட்டுப் பயணியொருவர், 6,644,860 ரூபாய் பெறுமதியான வைர மோதிரத்தை, விமானத்திலுள்ள கழிப்பறைக்குள் தவறவிட்டச் சம்பவமொன்று, அண்மையில் இடம்பெற்றுள்ளது.
“சேன்” என்றழைக்கப்படும் சீன நாட்டுப் பிரஜை, டோஹாவிலிருந்து ஹங்கோஜாவுக்கு, விமானத்தில் பயணித்துள்ளார்.
விமானத்திலுள்ள கழிப்பறைக்குச் சென்ற அவர், தவறுதலாக தனது கையிலிருந்த வைர மோதிரத்தை, கழிப்பறை குழிக்குள் தவறவிட்டுள்ளார்.
சுமார் 6 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை தவறிவிட்ட அவர், உடனடியாக அது தொடர்பில் விமான பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
விமானம் தரையிறக்கப்பட்டதன் பின்னர், விமான நிலைய சுத்திரகரிப்பாளர்கள், மேற்படி நபரின் மோதிரத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணித்தியால போராட்டத்தின் பின்னர், வைர மோதிரம் மீட்கப்பட்டு, மேற்படி பயணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனது மோதிரம் மீண்டும் கிடைக்குமென்று தான் நம்பிக்கைக்கொண்டிருக்கவில்லை என்று கூறிய அந்நபர், மோதிரத்தை மீட்டுக்கொடுத்த சுத்திகரிப்பு பணியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு, தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025