2025 மே 14, புதன்கிழமை

அடர்த்தியான உரோமங்களால் அல்லல்படும் 6 வயது சிறுமி

Kogilavani   / 2012 ஜூன் 11 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவைச் சேர்ந்த சிறுமியொருவரின் உடலில் பெரும்பகுதி அடர்த்தியான உரோமங்களால் சூழப்பட்டுள்ளது.

லியூ மிங்குயுங் எனும் 6 வயதான சிறுமியே இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாள். அவள் பிறக்கும்போதே அவளின் உடலில் 60 சதவீமான பகுதியில் இவ்வாறான உரோமங்கள் காணப்பட்டன.

இச்சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போது சிறுமியின் தாய் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இச்சிறுமியை  பாலர் பாடசாலையில் சேர்த்த அவளது தந்தையும் திரும்பிவரவில்லை.

பெற்றோர்களால் கைவிடப்பட்ட லியூ மிங்குயுங் குறித்து பத்திரிகையில் விளம்பரமொன்றை பிரசுரித்த பாலர் பாடசாலை நிர்வாகம், சிறுமியின் உறவினர்கள் யாரும் இருந்தால் தொடர்புகொள்ளுமாறு கோரியிருந்தது. ஆறுமாதம் கழித்து, சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரரின் தாத்தா ஒருவர் வந்து குறித்த சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

தனது தோற்றத்தை கண்டு லியூ மிங்குயுங் அவமானப்படுவதாக அவளை வளர்த்து வரும் குறித்த வயோதிபர் தெரிவித்துள்ளார்.

'ஏனையவர்கள் அவளது தோற்றத்தை கண்டு அச்சம் கொள்கின்றனர். அல்லது அவளது தோற்றத்தை கேலி செய்கின்றனர்' என அவர் தெரிவித்துள்ளார்.

லியூ மிங்குயிங்கின் நிலைமைக்கு என்ன காரணம் என மருத்துவர்கள் விளக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .