2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நகருக்கு வந்த 5000 வாத்துகளால் போக்குவரத்து நெருக்கடி

Kogilavani   / 2012 ஜூன் 20 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்ணையாளர் ஒருவர் தனது 5000 வாத்துக்களை நகர் பகுதிக்கூடாக அழைத்துச் செல்ல முயன்றபோது வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி நபர், சீனாவின் கிழக்கு மாகாணமான செய்ஜியாங்கின் டெய்ஸோ நகர வீதியில் தனது 5000 வாத்துக்களையும் அழைத்துக்கொண்டு தனது உதவியாளருடன் சென்றதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர்.

மேற்படி வாத்துகளுக்கு உணவு தேடுவதற்காக  சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குளமொன்றுக்கு அவை அழைத்துச் செல்லப்பட்டன.

பெரும் எண்ணிக்கையிலான வாத்துகளின் வரவினால் பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டு தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

தான் அடிக்கடி தனது வாத்துக்களை அழைத்துக்கொண்டு நகருக்கூடாக செல்வதாகவும் ஆனால் ஒருபோதும் தனது வாத்து எதுவும் தொலைந்ததில்லையென்றும் எனவும் மேற்படி பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .