2025 மே 14, புதன்கிழமை

யூரோ 2012 கால்பந்தாட்ட கிண்ணத்தை கைப்பற்ற டொப்லெஸ் பெண்கள் முயற்சி

Kogilavani   / 2012 மே 22 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


உக்ரைனிலும் போலந்திலும் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள 'யூரோ 2012' கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் கால்பந்தாட்ட அணிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், உக்ரைனில் வித்தியாசமான குழுவொன்று இக்கிண்ணத்தை 'கைப்பற்ற' முயன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள பெண்கள் சிலர் டொப்லெஸ் கோலத்தில் மேற்படி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்ற முயன்றனர்.

உக்ரைன் தலைநகர் கீவ்வை தலைமையாக கொண்டு இயங்கும் பெண்கள் உரிமைக்கான அமைப்பொன்று தொடர்ச்சியாக டொப்லெஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் யூரோ 2012 சம்பியன் கிண்ணம் உக்ரைனில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தபோது, மேற்படி டொப்லெஸ் போராட்டக் குழுவினர் இக்கிண்ணத்தை கைப்பற்ற முயன்றனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட இன்னா செவேங்கோ என்ற 21 வயதான பெண்ணொருவர், தனது மேலாடைகளை எறிந்துவிட்டு யூரோ வெற்றிக்கிண்ணம் தொடர்பாக தனது உடலில் எழுதி வைத்துள்ள ஆபாசமான வசனத்தை வெளிப்படுத்தினார்.

அப்பெண் மேற்படி 60 சென்றிமீற்றர் உயரமான வெற்றிக்கிண்ணமொன்றை தனது கையில் தூக்கி பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். அவரின் அருகிலிருந்த மற்றொரு பெண் மேலாடையை கழற்றி எறிந்துவிட்டு, அதேபோன்ற சுலோகத்தை வெளிப்படுத்தினார்.

இரண்டாவது பெண், பிரான்ஸிலிருந்து வெளிவரும் பெண் சஞ்சிகையொன்றைச் சேர்ந்த 46 வயதான  ஊடகவியலாளர் எனவும் இப்பெண்கள் குழுவுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதற்காக அவரும் போராட்டத்தில் இணைந்துள்ளார் எனவும் மேற்படி பெண்ணிய அமைப்பு தெரிவித்துள்ளது.

'மேற்படி பெண் பால்நிலைத்துவத்திற்கான போராட்டம், மற்றும் விபசாரத்திற்கு எதிரான எமது போராட்டங்களில் எம்முடன் இணைந்து செயற்படுகிறார்' என பெண் அமைப்பின் பேச்சாளர் அன்னா ஹட்சல் தெரிவித்துள்ளார்.

டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள யூரோ 2012 சம்பியன்ஷிப் கால்பந்தாட்ச் சுற்றுப்போட்டியின்போது உக்ரைனில் விபச்சார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என மேற்படி பெண்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .