2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

5ஆயிரம் மைல்கள் தூரம் விமானத்தில் பயணம் செய்த பாம்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 அங்குல நீளமுடைய பாம்பு ஒன்று சுமார் 5ஆயிரம் மைல்கள் தூரம் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் மெக்சிகோவில் இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் பயணிகளின் இருக்கைக்கு கீழ் இருந்த நிலையில் மெக்சிகோவின் கன்குன் விமான நிலையத்திலிருந்து ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரம் வரை இப் பாம்பு விமானத்தில் பயணித்துள்ளது.

விமான பணியாளர் ஒருவரே இவ்வாறு பாம்பு இருப்பதை கண்டறிந்து தகவலை வழங்கியுள்ளார்.

உடனடியாக மேற்படி பாம்பை ஸ்கொட்லாந்தின் வன உயிர் பாதுகாப்பு தொண்டுநிறுவனத்தினர் மீட்டெடுத்து சென்றுள்ளனர்.

திருட்டுத்தனமாக விமானத்தி;ல் பயணம் செய்ததால் இந்த பாம்பிற்கு 'திருட்டுப்பயல்' என அதிகாரிகள் பெயரிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .