Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 மார்ச் 14 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் குர்கோன் பகுதியிலுள்ள பெண்களை இரவு 8 மணிக்குப் பின் வீட்டில் தங்கியிருக்குமாறும், வேலைத்தளங்களில் பணிபுரிய வேண்டாமெனவும் அப்பகுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் இரண்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே இந்த விசித்திரமான உத்தரவை நிர்வாகிகள் விடுத்துள்ளனர். 8 மணிக்குப் பின்னர் பெண்கள் வேலைத்தளங்களில் பணிபுரிய வேண்டுமாயின் தொழிலாளர் திணைக்களத்திடம் குறித்த வேலைத்தளங்கள் அனுமதி பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குர்கோன் பகுதிக்கான பிரதிக் காவல்துறைப் பணிப்பாளர் பி.சி.மீனா இது தொடர்பான உத்தரவை விடுத்துள்ளார். 8 மணிக்குப் பின்னர் வேலைத்தளங்களில் பணிபுரிய அனுமதி பெறும் போது அப்பெண்களுக்கான போக்குவரத்துப் பொறுப்பையும் குறித்த வேலைத்தளங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு 8 மணிக்குப் பின்னர் பெண்கள் வேலைத்தளங்களில் பணிபுரிகிறார்களா என்பதைக் கண்டறிய சோதனைகள் நடத்தப்படும் எனவும், வேலைத்தளங்களில் கண்காணிப்பு கமெராக்களைப் பொருத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குர்கோன் பிரதேசம் இந்தியாவின் ஹரியானாவில் அமைந்துள்ளது. ஹரியானாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக அமைந்துள்ள இது, புது டெல்லியிலிருந்து 30 கிலோமீற்றர்கள் தெற்காக அமைந்துள்ளது. (க்ரிஷ்)
1 hours ago
2 hours ago
வில்லன் Wednesday, 14 March 2012 07:39 PM
சிவப்பு விளக்கு பகுதியை ஆரம்பித்தால் நிலைமையை சமாளிக்கலாமே?
Reply : 0 0
mohaemd jaleel Thursday, 15 March 2012 04:42 AM
நீங்க சரியான்ன லொள்ளு
Reply : 0 0
ashraff Thursday, 15 March 2012 03:28 PM
ஆக்கபூர்வமான திட்டம்.
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Friday, 16 March 2012 05:05 AM
வில்லன் உங்கள் திட்டம் அருமையானது. நல்ல வரவேற்பையும் காசையும் பார்க்கலாம் . ம்ம் ம்ம் அத்திட்டத்தை நீங்களே ஆரம்பிக்கலாமே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago