2025 மே 14, புதன்கிழமை

விழிகளற்ற நிலையில் 8 மாத குழந்தை

Kogilavani   / 2012 ஜூன் 07 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரு விழிகளும் அற்ற நிலையில் பிறந்த குழந்தையொன்று சீனாவின் உருமுக் பகுதியில் வளர்ந்து வருகிறது.

மரவன்ஜீன் என்றழைக்கப்படும் இக்குழந்தையே இவ்வாறு விழிகளற்ற நிலையில் பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு தற்போது வயது 8 மாதங்களே ஆகின்றன.

முகத்திற்கு ஒளியை காண்பிக்கும்போது அக்குழந்தை சிரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அக்குழந்தைக்கு இடது கண் இருக்கலாமென நம்பப்படுகின்றது.

குழந்தையை பெற்றோர்கள் கிராமத்து வைத்தியசாலைக்கு  அழைத்துச் சென்றபோது குழந்தைக்கு இடது புற கண் இருப்பதாகவும் ஆனால் அது தோல்பகுதியினால் மறைக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

'அவன் ஒளியை பார்க்க ஆவலாக உள்ளான். பிரார்த்தனையில் ஈடுபட்டால் அவனால் ஒளியை பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் நாங்கள் தினமும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றோம்' என்று அக்குழைந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இக்குழந்தையின் கண்ணில் கண்வில்லை இல்லையென வைத்தியசாலையின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இக்குழந்தை சத்திர சிகிச்சைக்கு பொறுத்தமற்றது எனவும் 16 வயதை அடைந்த பின்னர் செயற்கை கண் பொருத்துவது சிறப்பானதாக அமையுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.




You May Also Like

  Comments - 0

  • Nilavan Thursday, 07 June 2012 08:36 AM

    இறைவா... இது நீ செய்யும் கொடுமை அல்லவா... உன்னைத் தண்டிப்பது யார்?

    Reply : 0       0

    abdul Thursday, 07 June 2012 11:57 AM

    எல்லாம் வல்ல அல்லாஹ் அவன் நிலை உன் கையில்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .