2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கதவின் அடியில் 9 மணித்தியாலங்கள் சிக்கித் தவித்த திருடன்

Super User   / 2012 ஜூலை 01 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருடுவதற்காக கடையொன்றுக்குள் புக முயன்ற நபர் ஒருவர் அக்கடையின் கதவின் கீழ் 9 மணித்தியாலங்களாக சிக்கித் தவித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மஸாசூட்ஸ் மாநிலத்திலுள்ள இக்கடையின் கதவை இரும்புக் கம்பியொன்றின் மூலம் திறந்து உட்செல்வதற்கு 53 வயதான மேற்படி நபர் முயன்றார். கதவை மேலே உயர்த்தி இரும்புக்கம்பியை முட்டுக்கொடுத்துவிட்டு, உள்ளே புகுவதற்கு அவர் முயன்றார்.

ஆனால், இரும்புக் கம்பி நழுவிக்கொண்டதால் கதவு மீண்டும் கீழிறங்கியது. இதனால் அந்நபரின் தலை மாட்டிக்கொண்டது.
நள்ளிரவிலிருந்து 9 மணித்தியாலங்களாக கதவில் மாட்டிக்கொண்ட நிலையிலிருந்த மேற்படி நபரை மறுநாள் கடையின் முகாமையாளர் கண்டு, பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அதையடுத்து மேற்படி சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

கடையை திறப்பதற்காக சென்றபோது, கதவின் வெளியே தலையொன்று தென்பட்டதை அவதானித்தேன். அந்பர் தான் கதவை பழுதுபார்க்க முயன்றதாக கூறினார் என அம்முகாமையாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • படிக்காதவன் Thursday, 12 July 2012 02:14 AM

    கள்ளன் கையும் மெய்யுமாய்.... இல்லை இல்லை... தலையும் கதவுமாய் மாட்டிக் கொண்டான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .