2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காதலனை 90 முறை கத்தரிக்கோல்களால் குத்திக் கொன்ற பெண்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் தனது காதலரை 90  முறை கத்தரிக்கோல்களால் குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் வடக்கு ஸடபோர்ட்ஷயர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மார்க் சான்ட்லர் என்ற 42 வயது பெண்ணே கரேன் கிளிம்ப்சன் என்ற தனது 46 வயதுடைய காதலரை இவ்வாறு கொலை செய்துள்ளார்.

மேற்படி இருவரின் சடலங்களும் அவர்களின் வீட்டிலிருந்த கடந்த ஜனவரி மாதம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

சான்ட்லருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள கரேன் ஆத்திரத்தில் கத்திரிக்கோல்களை எடுத்து சான்ட்லரை குத்தியுள்ளார். பின்னர் சவரக் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சான்ட்லரின் உடலில் 90 இடங்களில்  காயங்கள் காணப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

'இது விடயத்தில் ஏதாவது நடந்திருக்கலாமென அச்ச உணர்வொன்று உள்ளது. வீட்டில் காணப்பட்ட திரைச்சீலைகள் நிலத்தில் வீழ்ந்து கிடந்தன. கதவு நன்கு தாழிடப்பட்டிருந்தது. நான் பதட்டத்துடன் இருந்தேன். ஏதவாதொன்று நடந்திருக்குமென்று எனக்கு தெரிகிறது' என கரேனின் வைத்தியர் கிறிஸ்டினி கார்வேன் இச்சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .