2025 மே 14, புதன்கிழமை

11 வயது மகனை நிலக்கரி கிடங்கில் ஒருவருடம் அடைத்துவைத்த பெற்றோர்

Kogilavani   / 2012 மே 22 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியை திறந்த  பொருட்களை எடுத்த குற்றத்திற்காக 11 வயதான சிறுவனை ஒரு வருடகாலம் கடும் குளிரான அருவருப்பு மிக்க நிலக்கரி கிடங்கொன்றில் சிறைப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படும் அச் சிறுவனின் தாய் மற்றும் வளர்ப்புத்தந்தை ஆகியோரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று  இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பிளெக்பூல் பகுதியில் ஜன்னல்களற்ற வெளிச்சமற்ற இந் நிலக்கரிக் கிடங்கொன்றில் இச்சிறுவன் பல கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளான்.

இச்சிறுவன் அருவருப்புமிகுந்த அந்த நீலக்கரி சுரங்கத்தில் ஒவ்வொரு நாள் காலை முதல் மாலை வரை அடைத்துவைக்கப்பட்டுள்ளாரென சமூக சேவையாளர்கள் பிரெஸ்டன் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஒளி விளக்கு மட்டுமே வைக்கப்பட்டிருந்த மேற்படி பங்கருக்குள் இச்சிறுவன் நித்திரைகொள்வதற்காக அசுத்தம் மிகுந்த மெத்தையொன்று வழங்கப்பட்டுள்ளது. பை ஒன்றையே அவன் தனது போர்வையாக பயன்படுத்தியுள்ளான்.

மலசலக்கூடத்தை பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது, அவன் தனது அறையின் கிழக்குப் பக்க தரையை பயன்படுத்த வேண்டியிருந்தது.

குளிர்சாதன பெட்டியை திறந்து பொருட்களை எடுத்த குற்றத்திற்காக மேற்படி சிறுவன் ஜன்னல்களற்ற அறையில் ஒருவருடம் மட்டும் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுவன் 11 ஆவது வயதிலிருந்து 12 வயது வரை இவ்வாறு  அடைக்கப்பட்டிருந்தான். பொலிஸார் மற்றும் சமூக சேவையாளர்கள் இணைந்து மேற்படி சிறுவனை இந் நிலக்கரி பங்கருக்குள் இருந்து மீட்டுள்ளனர்.

இச்சிறுவனின் 40 வயதுக்குட்பட்ட பெற்றோருக்கான தண்டனை அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .