2025 மே 13, செவ்வாய்க்கிழமை

200 பாம்புகளுடன் வாழ்ந்த பெண்ணுக்கு நெருக்கடி

Kogilavani   / 2014 ஜனவரி 31 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமார் 200 பாம்புகளுடன் சிறிய வீடொன்றில் வசித்து வந்த 64 வயதுடைய பெண்ணொருவர் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இவர் தனது வீட்டில் இறந்த நிலையிலும் உயிருடனும் பாம்பு மற்றும் பூனை என்பவற்றை வைத்திருந்ததால் இவரை ஒருவருடத்திற்கு சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரிவிடப்பட்டுள்ளதுடன் ஊர்வனவை வைத்திருப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

போல்னி வோல்ஸ் என்ற அழைக்கப்படும் மேற்படி பெண் தனது தாயுடனும் மற்றும் 200 பாம்புகளுடன் சிறிய வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இவரது தனது படுக்கையறையில் மட்டும் சுமார் 114 பாம்புகளை வைத்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் அப்பாம்புகளை பாதுகாப்பாக வைத்திருக்காத காரணத்தினால் வண ஜீவராசிகள் திணைக்களத்தினர் அவரது வீட்டை சோதனை செய்ததுடன் அவர் மீது வழக்கும் தொடுத்தனர்.

இவர் பாம்புகளுக்காக இதுவரை 150,000 ஸ்ரேலிங் பவுன்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டை சோதனையிடும்போது இறந்த நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 20 பாம்புகளையும் பூனையொன்றையும் மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த உயிரினங்களை புதைக்க முடியாத காரணத்தினால் குளிர்சாதன பெட்டியில் போட்டு வைத்தாக அப்பெண் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

உயிருடன் இருக்கும் பாம்புகள் பழைய போத்தல்கள், பிளாஸ்திக் குப்பை வாளிகள் என்பவற்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

பாம்புகளை முறையாக பராமறிக்காததன் காரணத்தால் இப்பெண்ணுக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

'ஆரம்பத்தில் ஒரு பாம்பை பிடித்து அவர் வளர்த்துள்ளார். தான் படுக்கைக்கு சென்றபின் அந்த பாம்பு மட்டும் தனியாக உறங்குவதை அவதானித்து அவருக்கு அப்பாம்பின் மீது இறக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின் அதிகமான பாம்புகளை எடுத்து வளர்க்கத் தொடங்கியதுடன் பாம்பு கூடமாக தனது வீட்டை மாற்றியுள்ளார். இப் பெண் வளர்த்து வந்த பாம்புகளில் அநேகமானவை மிகவும் சிறியவை.  புழுக்கள் அல்லது தவளைகளை கடக்கும்போதே அவை தமது அபாய தன்மையை வெளிப்படுத்துகின்றன' என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X