Kogilavani / 2011 மார்ச் 13 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேர்பியாவில், தனது உடலில் காந்த சக்தியை கொண்ட மனிதர் ஒருவர் எல்லோரையும் 'கவர்ந்து' வருகிறார்.
மிராஸ்லோவ் மென்டிக் (வயது 67) என்ற இந்த மனிதரின் உடலில் உலோகங்கள் ஒட்டிக்கொள்வதால் அவர் காந்த மனிதர் என வர்ணிக்கப்படுகிறரார்.
இவர் சிமானோவிக் நகரில் வசித்து வருகிறார். நாணயங்கள், கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள், கத்திகள் மற்றும் உலோகப் பொருட்கள் என்பன காந்தத்தில் ஒட்டிக்கொள்வது போன்று அவரின் உடலில் ஒட்டிக்கொள்கின்றன.
' நான் இளமையாக இருக்கும்போது இது ஆரம்பித்தது. நான் பத்திரிகையொன்றை வாங்கிவிட்டு நாணயத்தை கொடுக்க முயன்றேன். ஆனால் அது என் கையை விட்டு அகலவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
' பின்னர் இந்த ஈர்ப்பு சக்தி மிகவும் வலிமையடைந்தது. மற்றும் அது உபத்திரத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தது. மக்கள் மத்தியில் நான் நடக்கும் போது அவர்களது சாவிக் கொத்துகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரும்புப் பொருட்கள் என்மீது ஒட்டிக் கொள்வதை பார்க்க அவர்கள் களைப்படைவதில்லை.
ஆனால் எனது மனைவி என்னை திட்டுவார். ஏனெனில் நான் தொலைக்காட்சி மற்றும் வானொலி இருக்கும் இடத்தை கடந்து செல்லும் ஒவ்வொரு தடவையும் அலைவரிசைகள் மாறுகின்றன' எனவும் மிராஸ்லோவ் மேலும் தெரிவித்துள்ளார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago