Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்திலுள்ள கணினி மென்பொருள் நிறுவனமொன்று தனது அலுவலகத்தில் நிர்வாணமாக கடமையாற்றக்கூடிய பெண்களை பணியிலமர்த்த திட்டமிட்டுள்ளது.
பக்கிங்ஹாம்ஷயர் பிராந்தியத்திலுள்ள இந்த நிறுவனத்தின் பெயர் நியூட் ஹவுஸ் (நிர்வாண இல்லம்) என்பதாகும்.
'இயற்கையிலாளர்களின் ' இந்த விற்பனை அலுவலுகத்தில் ஊழியர்கள் 'சூடான, அந்தரங்கமான சூழலில்' பணியாற்றுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிர்வாணமாக பணியாற்றிக்கூடிய ஆண், பெண் இருபாலாரையும் எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் பேச்சாளரார் கிறிஸ் டெய்லர் இது குறித்து தெரிவிக்கையில் 'இது பிரிட்டனில் ஏற்படுத்தப்பட்டுள்ள இயற்கையியலாளர்களுக்கான முதலாவது மென்பொருள் விற்பனையாளர் தொழில் வாய்ப்பல்ல. மாறாக இது, ஆடைகளின்றி தொழில் செய்பவர்களுக்கு கணிசமான ஊதியத்தை வழங்கும் முதலாவது உலகளாவிய நிறுவனமாகும்' எனக் கூறியுள்ளார்.
இது இத்தகைய உலகின் முதல் நிறுவனம் என்பதால் இதை விளம்பரப்படுத்துவது கடினமாகும். பாலியல் அதிகரித்துள்ள சூழலில் தனிமனித சுதந்திரம் பற்றிய கவலையின்றி, இவ்வாறு ஆடைகளின்றி வேலைத்தளங்களில் இருப்பதை பலர் குழப்பமாக பார்க்கின்றனர்.
'இயற்கையியலில் செக்ஸ் என்பது ஒரு விளையாட்டாக பகுதியாக முடியாது. ஆம், ஒவ்வொருவரினதும் செக்ஸ், வயது, தோற்றம் அமைப்பு என்பவற்றின் வித்தியாசத்தை அனைவரும் அறிவர். ஆனால் இங்கு மனிதர்களின் தொழில்நுட்ப ஆற்றல்தான் கரிசனைக்குரியது.' என அவர் கூறினார்.
புதிய விண்ணப்பதாரிகள் வீட்டிலிருந்து வேலைக்கு வரும் போதும் வேலைத்தளதிலிருந்து செல்லும்போது ஆடைகளுடன் இருக்கலாம். தொழிலில் செய்யும் போது அவர்கள் நிர்வாணமாக இயங்க வேண்டும். இதற்கு ஒத்துக்கொள்பவர்கள் மட்டுமே இவ்வேலைக்கு இணைத்துக் கொள்வார்கள் என்று இந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாணம் எனும்போது பாதணிகள் உட்பட எந்த ஆடைகளையும் அணியக் கூடாது. ஆனைத்து புதிய அங்கத்தவர்களும் இயற்கையாக இருக்க வேண்டும். இவர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்வாங்கப்படுவார்கள் என அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
xlntgson Thursday, 07 April 2011 08:59 PM
யாரும் சிரிக்கக் கூடாது என்று ஒரு சட்ட விதியையும் நுழைக்கவேண்டும்!
Reply : 0 0
mohamed Friday, 08 April 2011 04:53 AM
கலி முத்திட்டு
Reply : 0 0
hamna Monday, 11 April 2011 04:59 PM
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து செயல் பட வேண்டாம் பெண்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Reply : 0 0
Rinos Monday, 11 April 2011 09:41 PM
உலகம் இறுதி நாளை எட்டி நின்று பார்க்கிறது. இது எல்லாம் நாசிசவாதிகளின் வேலை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025