2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பயணிகளை வெளவால் பீதியூட்டியதால் திசைதிருப்பப்பட்ட விமானம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விமானங்களில் பாம்புகள் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட சம்பவங்கள் பல உள்ளன. ஆனால், வெளவால் ஒன்று விமானத்திற்குள் வந்ததால் விமானம் திசை திருப்பப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில்இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானமானது விஸ்கொன்ஸின் மாநிலத்தின் மெடிசன் நகரிலிருந்து, ஜோர்ஜியா மாநிலத்தின் அட்லான்டா நகருக்கு புறப்பட்டது. ஆனால் விமானத்திற்குள் வெளவால் ஒன்று பயணிகளை பீதியூட்டிக்கொண்டிருந்ததால் இவ்விமானம் மீண்டும் மெடிசன் நகருக்கே திசை திருப்பப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த பயணியொருவர் குறித்த பறவையை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து ஊடகமொன்றிற்கு அனுப்பியுள்ளார்.

அப்பயணி இச்சம்பவம் குறித்து விபரிக்கையில்,

'நான் சிறிய அலறல் சத்தம் கேட்டு கண்விழித்தபோது எனது தலைக்கு மேலாக குறித்த பறவை பறந்துக்கொண்டிருந்தது.
எனது நண்பர்கள் இதனை ஒருபோதும் நம்பமாட்டார்கள் என்பதற்காக அதனை நான் எனது செல்லிடத் தொலைபேசி கமராவில் ஒளிபதிவு செய்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .