2025 மே 14, புதன்கிழமை

பிள்ளைகளுக்காக வாங்கப்பட்ட புதிய கணினியில் ஆபாசப்படங்கள்: தாய் அதிர்ச்சி

Kogilavani   / 2011 நவம்பர் 13 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்ணொருவர் தனது இரு இளம் பிள்ளைகளுக்கு வாங்கிகொண்டு வந்த புதிய கணினியில் ஆபாசப் புகைப்படங்களை நிறைந்து கிடந்தத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த சாரா கெய்ன்ஸ் (வயது 30) என்ற பெண் தனது எட்டு வயது மகளான மெய்ஸிக்கும் ஏழு வயது மகனான ரோயிற்கும் நத்தார் பரிசாக 'டெப்லட்' பாணிக்  கணினிகளை புதிதாக வாங்கிக்கொடுத்துள்ளார்.

அவர் கணினியின் புரோகிராம் பகுதியை கிளிக் செய்தபோது, டஸன் கணக்கிலான ஆபாசப் புகைப்படங்களும் பாலியல் கதைகளும் அதில் பதிவிறக்கம் செய்யட்டிருந்துள்ளன.

இது குறித்து சாரா தெரிவிக்கையில், 'மெய்ஸியும் ரியோவும் இணையத்தளத்தில் சென்று பாடல்களை கேட்பதில் அதிக ஆர்வமுடையவர்கள். குறித்த கணினிகளானது 60 ஸ்ரேலிங் பவுண்கள் மாத்திரமே என்பதால்  அக் கணினிகள் இரண்டையும் அவர்கள் இருவருக்குமாக வாங்கினேன்.

அவர்கள் பாடசாலைக்குச் சென்றபின் அக்கணிகள் எப்படி உள்ளன என்று பாரப்பதற்காக அவற்றை வெளியே எடுத்தேன்.

அக்கணினிகளில் ஒன்று வேலை செய்யவில்லை. மற்றைய கணினியில் புரோகிராம்கள்  பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன. நான் ஈ-புக்ஸ் பகுதியை ஓபன் செய்து பார்க்கும்போது அதிகமான ஆபாசப்படங்கள் திரையில் தோன்றின.

என்னால் அதனை நம்பவே முடியவில்லை. கிறிஸ்மஸ் நாளில் எனது பிள்ளைகள் இந்த காட்சிகளை பார்த்திருந்தால் அந்த நாளேயே இப்புகைப்படங்கள் நாசமாக்கியிருக்கும்.

இக்கணினிகள் வாங்கப்பட்ட கடையை நான் தொடர்கொண்டபோது அக் கணினிகளை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டது. ஆனால் மன்னிப்பு எதுவும் கோரப்படவில்லை'
என்றார்.

இவ்விடயம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என குறித்த முகாமையாளர் டேவ் ஸ்டொக்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

"கெய்ன்ஸ் அந்த கணினிகளை மீண்டும் கொண்டுவந்து தந்தால் நாங்கள் அந்த கணினிகளை தயாரித்த நிறுவனத்திடம் விசாரணைக்காக அவற்றை அனுப்பிவைப்போம். அவை புதிய கணினிகளாகும். எனவே இது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்"என்றார்.

"எமக்கு பதில் கிடைத்தவுடன் திருமதி கெய்ன்ஸை நாம் மீண்டும் உடனடியாக தொடர்பு கொள்வோம்" என அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • nilam Wednesday, 16 November 2011 02:57 PM

    நல்லா இரிக்கீங்க உங்கட நாடகம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .