2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குழந்தைகளுக்கான ஆடை விளம்பரத்தில் நிர்வாண நபர் தோன்றியதால் சர்ச்சை

Kogilavani   / 2012 ஜனவரி 08 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரான்ஸிலுள்ள ஆடை நிறுவனத்தின் விளம்பரமொன்றில் நிர்வாணக் கோலத்துடன் நபரொருவர் நிற்கும் காட்சி இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதால் அந்நிறுவனம் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளது.

குழந்தைகள் தோன்றும் ஆடை விளம்பரத்திலேயே இவ்வாறான காட்சி கவனயீனமாக இடம்பெற்றுள்ளது.

குறித்த காட்சியில் ஆடை விளம்பரத்திற்காக குழந்தைகள் முன்னால் நின்றுகொண்டிருக்கும்போது கடற்கரை காட்சியடங்கிய பின்னணியில இனந்தெரியாத நபரொருவர் நிர்வாணக்கோலத்துடன் காணப்படுகிறார்.

லா ரிடௌட் எனும்  மேற்படி பிரான்ஸிய நிறுவனமானது இவ்விளம்பரத்திற்காக  மன்னிப்புக் கோரியுள்ளதுடன் அப்படத்தையும் அகற்றியுள்ளது. ஆனால் அதற்கு முன்பதாக இணையத்தள பாவனையாளர்கள் அப்படங்களை பதிவிறக்கம் செய்துவிட்டனர்.

இவ்விளம்பரம் குறித்து டிவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

'நான் தாய் என்ற ரீதியில் இந்த புகைப்படத்தைக்கண்டு மகிழ்வடையவில்லை'  என பெண்ணொருவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அந்நிறுவனத்தின் பேச்சாளர் இதுதொடர்பாக கூறுகையில், இந்த தவறு எப்படி ஏற்பட்டது என்பதை விசாரிக்கிறோம். இக்காட்சிக்காக வாடிகையாளர்களிடமும்  இணையத்தள பார்வையாளர்களிடமும் லா ரீடௌட் நிறுவனம் மன்னிப்பைக் கோருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .