2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருட்டிலிருந்து தப்புவதற்கு கட்டிலுடன் பொருத்தப்பட்ட அதிநவீன பாதுகாப்பு பெட்டகம்

Super User   / 2012 மார்ச் 30 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை காரணமாக கொள்ளைக் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிக்கலாம் அஞ்சுபவர்களுக்காக கட்டிலுடன் பொருத்தப்பட்ட அதிநவீன பாதுகாப்பு பெட்டங்களை நிறுவனமொன்று வடிமைத்துள்ளது.

பெட் பங்கர் எனப்படும் இந்த பாதுகாப்பு பெட்டகம் சுமார் 1300 இறாத்தல் எடையுடையது. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் அதிநவீன பூட்டுகள் இதில்பொருத்தப்பட்டுள்ளன.

கோடீஸ்வரர்கள் பலர் தனது இத்தயாரிப்பை வாங்கி வருவதாக இதை வடிவமைத்த ஜோன் அட்ரெய்ன் என்பவர் கூறியுள்ளார்.

'வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. பெறுமதியான பொருட்களை வைத்துக்கொள்வதற்கு உங்கள் கட்டில்அடியைவிட பாதுகாப்பான இடம் வேறு எங்கிருக்க முடியும்?' என அவர் வினவுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .