2025 மே 14, புதன்கிழமை

மார்பகங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொன்டெங்குரோ நாட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவர்கள், மார்பகங்களையும் இலக்கமொன்றையும் பாரிய பதாகைகளில் பொறித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பதாகைகளில் மார்பகங்களுக்கு அருகில் இலக்கம் '5'  பொறிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குச்சீட்டில் 5 ஆவது வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள சேர்பிய இனத்தவர்களின்  ஸ்பர்ஸ்கா லிஸ்டா எனும் கட்சியை நினைவுப்படுத்துவதற்காக இப்பிரச்சார பதாகை அமைக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை இலக்கம் 5 என்பது உள்ளூர் மார்புக் கச்சை அளவொன்றையும் குறிப்பிடுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்த பிரச்சார உத்திக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.  இப்பதாகையை பார்த்து வாகனம் செலுத்திய பலரால் விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

'இது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளதுடன். ஆபத்தானதுமாகும்' என மாற்றுக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .