2025 மே 14, புதன்கிழமை

குழு ரீதியான பாலியலை ஊக்குவித்த தியான குருவுக்கு சீன பொலிஸார் வலைவீச்சு

Kogilavani   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் கணவர், மனைவியரை தம்பதிகள் பரிமாறிக்கொள்வதையும் குழு ரீதியான பாலியல் நடவடிக்கைகளையும் ஊக்குவித்த நபர் ஒருவரை கைது செய்வதற்கு அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.

கின் மிங்யுவான் எனும் இந்நபர் தான் ஒரு தியான குரு எனக் கூறிக்கொள்பவர். குழுநிலை பாலியல் மற்றும் துணைவர்களை பரிமாறிக்கொள்ளுதல் என்பவற்றை ஊக்குவித்த குற்றச்சாட்டின் காரணமாக அவரின் 3 தியான நிலையங்களை பொலிஸார் சீல் வைத்தனர்.

இந்நிலையத்தில் வகுப்புகளை ஏற்பாடு செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

'சூடான, சுதந்திர காதல்' குறித்து கற்பிப்பதற்கு இந்தியாவின் புனே நகரிலுள்ள ஓஷோ பயிற்சி நிலையத்தில் தான் கற்றதாக கின் மிங்யுவான் கூறியுள்ளார்.

உயர் அந்தஸ்திலுள்ள சீனர்கள் மத்தியில் ஆன்மீக தேடல்கள் அதிகரித்துள்ள நிலையில் கின் கிம்யுவான் போன்ற குருமார்கள் பலர் வெளிவர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .