2025 மே 14, புதன்கிழமை

டுபாயில் காருக்குள் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி கைது

Kogilavani   / 2012 மே 17 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


டுபாயில் மது அருந்திய நிலையில் காரொன்றினுள் பாலியல்  உறவில் ஈடுபட்ட பிரித்தானிய பெண்ணொருவர் மூன்று வருட சிறை தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

றெபேக்கா பிளெக் எனும் 29 பெண்ணும்  கோனர் மெக்ரெட்மோன்ட் என்ற நபரும் மேற்படி நடத்தைக் காரணமாக டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருமணத்திற்கு அப்பால் பாலியல் உறவுகொண்டமை, பொது இடத்தில் மது அருந்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் காரணமாக, இருவரும் 5 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். பொது இடத்தில் மது அருந்திவிட்டு தகாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக மேற்படி இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

மேற்படி இருவரும் டுபாய் மதுபான விடுதியொன்றில் சந்தித்துள்ளனர். சுமார் 12 மணித்தியாலம் மது அருந்தியபின் இவர்கள் டுபாய் மரினா பகுதியை நோக்கி வாடகைக்  காரில் பயணிக்க தொடங்கினர்.

இப்பயணித்தின்போது இவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை  கண்ணாடியூடாக அவதானித்த சாரதி காரை நிறுத்திவிட்டு பொலிஸில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காரின் அருகில் சென்று பார்த்தபோது அப்பெண்  நிர்வாணமாக காணப்பட்டதாகவும் அந்த ஜோடி பாலியல் உறவில் ஈடுபட்டிருந்ததையும் அவதானித்ததாக, தெரிவிக்கப்படுகின்றது.

அப்பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் தான் காரில் மது அருந்தியமைக்காகவே கைது செய்யப்பட்டதாகவும் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அதிகாரிளால் குற்றம் சுமத்தப்படவில்லை எனவும் அப்பெண் செவ்வியொன்றில் கூறியுள்ளார். காரில் தான் மட்டுமே பயணம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .