2025 மே 14, புதன்கிழமை

உறக்கத்தை குழப்பிய காதல் ஜோடியின் பாலியல் உறவு ஒலிகளை இணையத்தில் வெளியிட்ட நபர்

Kogilavani   / 2012 மே 20 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் ஜோடியொன்று பாலியல் உறவில் ஈடுபடும்போது ஏற்படுத்திய முனகல் ஒலிகளின் காரணமாக விரக்தியடைந்த அயலவர் ஒருவர், அந்த ஒலிகளை பதிவு செய்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஒலிப்பதிவை இணையத்தளம் மூலம் பெரும் எண்ணிக்கையானோர் கேட்டுள்ளனர்.

இக்காதல் ஜோடியினால் தூக்கத்தை தொலைத்த பிரிட்டனைச் சேர்ந்த லீ மூர் என்ற நபரே இவ்வாறு குறித்த ஒலிகளை பதிவு செய்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நடவடிக்கையின் மூலம் அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றத்திற்காக மேற்படி காதல் ஜோடியினால் தான் பழிவாங்கப்படலாமென குறித்த நபர் அச்சம் கொண்டுள்ளார்.

இந்த ஒலிப்பதிவில் குறித்த பெண் வெளிப்படையாக கத்தும் சத்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 நிமிடம் கொண்ட மேற்படி ஒலிப்பதிவு மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இதுத் தொடர்பில் மூர் தெரிவிக்கையில், உறக்கத்தை குழப்பும் விதமாக பலமான சத்தம் வந்ததால் நான் பெல்கனிக்கு சென்று அச்சத்தம் எங்கிருந்து வருகின்றது என அவதானித்தேன். இது குறித்து புகாரிட்டபோது எனது வீட்டு ஜன்னலை மூடிக்கொள்ளுமாறும் அல்லது வாயை மூடிக்கொள்ளுமாறும் அப்பெண் கூறினார். ஆனால் ஜன்னல்களை மூடிய பின்னரும் சத்தம் கேட்டது என தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த ஒலிகளை ஒலிப்பதிவு செய்து அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பின்பு மூர் தனது வெறுப்பை வெளிபடுத்தும் வகையில் அடுத்த முறை ஜன்னல்களை மூடிக்கொள்ளுங்கள் என அந்த ஜோடியின் வீட்டின்முன் குறிப்பொன்றையும் எழுதி வைத்துள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .