2025 மே 14, புதன்கிழமை

மற்றொரு நபரின் முகத்தை கடித்த நிர்வாண மனிதரை சுட்டுக்கொன்ற பொலிஸார்

Kogilavani   / 2012 மே 28 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


வீதியொன்றில் நிர்வாணக் கோலத்தில் காணப்பட்ட  நபரொருவர், மற்றொரு நபரின் முகத்தை கடித்து மென்றபோது அவரை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவமொன்று அமெரிக்காவின் மியன்மார் நகரில் உள்ள சாலையொன்றில் பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேற்படி தாக்குதலை  முடிவுக்குகொண்டுவருவதற்காக தாக்குதல் நடத்திய நிர்வாண நபர் மீது பொலிஸார்  துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஆனால் கோபம் கொண்ட அந்நபர் தொடர்ந்தும் மற்றைய நபரின் மீது தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் இருந்தார்.

இதனால் பொலிஸார் 6-7 தடவைகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட போது அந்நபர் உயிரிழந்துள்ளார்.

முகத்தில் கடிபட்ட மனிதர் பலத்த காயங்களுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் பல காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆண்கள் இருவரும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததை கண்ட பெண்ணொருவர் இது குறித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
பொலிஸார் குறித்த இடத்தை அடைந்தபோது கோபம்கொண்ட நபர் மற்ற நபரை வன்மையாக முகத்தில் குத்தியதுடன் அந்நபரின் முகத்தை மெல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார். பாதிக்கப்பட்ட நபரும் ஆடைகளின்றியே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளரான ஜேவியர் ஒரிட்ஸ் இது குறித்து தெரிவிக்கையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டே குறித்த நபரை பொலிஸார் காப்பாற்றியமை குறித்து தாம் தகவல் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். இச்சம்பவத்தில் படுகாயமுற்ற நபர் உயிருக்குப் போராடி வருகிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .