2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முன்னாள் மனைவியின் படுக்கையறையில் கமரா பொருத்தியவர் நெருக்கடியில்

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது முன்னாள் மனைவியின் படுக்கையறை கூரையில் கமராவை பொருத்தி கடந்த 9 மாதங்களாக அவரது நிர்வாண படங்களை சேகரித்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

43 வயதுடைய பெண்ணொருவரே இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். குறித்த பெண்ணை நிர்வாணக் கோலத்தில்  காண்பதற்கு மாத்திரம் தான் விரும்பியதாக அந்நபர் தெரிவித்ததாக நீதிமன்ற ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அயலவரொருவர் குறித்த பெண்ணின் வீட்டின் வாயுச்சீராக்கியை பழுதுபார்பப்பதற்காக சென்றபோதே, கமரா பொறுத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

கமராவிலிருந்து இரண்டு வயர்கள் மடிக்கணினி பகுதிக்கு செல்லும் வகையில் அப்பெண்ணின் படுக்கையறையில் கமரா பொருத்தப்பட்டிருந்ததை அயலவர் அவதானித்துள்ளார்.

அப்பெண் குறித்த மடிக்கணியை அவதானித்தபோது அது தனது முன்னாள் கணவருக்கு சொந்தமானது என இனங்கண்டார். அக்கணியில் மேற்படி பெண் படுக்கையறையில் ஆடையுடனும்  நிர்வாணமாகவும் அரைகுறை ஆடைககளுடனும் இருந்த  புகைப்படங்கள் காணப்பட்டன.

குறித்த கமராவானது கடந்த 2011 ஜுலை முதல் 2012 மார்ச் மாதம் வரை பொருத்தப்பட்டிருந்துள்ளது.

கமராவை பொருத்தி முறையற்ற விதமாக படம்பிடித்ததாக மேற்படி நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் அந்நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .