2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உரத்த ஒலியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக தம்பதி மீது வழக்கு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரவில் அயலவர்களின் அமைதியை குழப்பும் வகையில் உரத்த ஓசை எழுப்பியவாறு பல மணித்தியாலங்களாக பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியொன்றின் மீது அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

கொலின் மெக்கென்சி (45) ஜெஸீகா ஏஞ்சல் (34) மற்றும்  ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு  வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி இருவரும் பாலியல் உறவில் ஈடுபடும்போது கத்துதல், உரத்த புலம்புதல் போன்ற சத்தங்களை எழுப்பி சூழலின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அயலவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய செயற்பாடு காரணமாக மேற்படி தம்பதியினர் வசிக்கும் வீட்டுத்தொகுதிக்கு  கடந்த நான்கு மாதங்களுக்குள் 20 தடவைகளுக்கு மேல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான  முறைப்பாடு காரணமாக, சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேற்படி தம்பதியினரின் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டால் சுமார் 626,000 ரூபா  அபராதமாக விதிக்கப்படும்.

இவர்கள் இவ்வாறு தினமும் 7 மணித்தியாலங்கள் வரை உரத்த சத்தத்துடன் பாலியல் உறவில் ஈடுபடும் நடவடிக்கையை வாரத்தில் 5 நாட்கள் மேற்கொள்வதாக அயலவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அயலவர்களின் அமைதியை குழப்பும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என இவர்களுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் கைது செய்யப்பட்டு எமது சொந்த வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாலியல் உறவில் ஈடுபட வேண்டாம் என உத்தரவிடப்படும் அளவுக்கு நாங்கள் ஒலி மாசடைதல் எல்லையை மீறியுள்ளோம் என்று கூறுகிறார்கள்" என  ஏஞ்சல்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மெக்கன்ஸி கூறுகையில், "இது அபத்தமான குற்றச்சாட்டு, தினமும் 7 மணித்தியாலங்கள் பாலியல் உறவில் ஈடுபட்டால் அநேகமாக நான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிடுவேன்" எனக் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .