2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாலியல் உறவு வைத்துகொள்ளுமாறு மாணவனுக்கு குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியை கைது

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் உறவு வைத்துகொள்ளுமாறு தனது வகுப்பு மாணவனுக்கு குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியை ஒருவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் இல்லினயாஸ், பியோரியா நகரைச் சேர்ந்த அமன்டா லுட்விக் (வயது 28) என்ற ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓவிய ஆசிரியையான இவர் தரம் 9 இல் கல்வி கற்றுவந்த தனது வகுப்பு மாணவனுக்கு பாலியல் ரீதியிலான குறுந்தகவல்களை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

மாணவனின் உணர்ச்சியை தூண்டும் வகையில் பாலியல் ரீதியான வார்த்தைகளை பிரயோகித்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் பாடசாலை நிர்வாகத்திடம் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து பாடசாலை நிர்வாகமும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி ஆசிரியை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தனது பிழையை ஒத்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவருக்கு 10 சிறைதண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .