2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

ஒரு நாயின் கதை

Gavitha   / 2015 ஜனவரி 14 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

7 வருடங்களாக, 14,000 பேரின் வீட்டில் வளர்ந்த நாயொன்றின் கதை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டார்லிங்டன் என்பது இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரில் தெரு நாய்களை வளர்ப்பதற்கான அறக்கட்டளையொன்று காணப்படுகின்றது. இந்த அறக்கட்டளையில், ஜெட்ஸ் என்று அழைக்கப்படும் நாயொன்றும் வளர்க்கப்பட்டது.

இவ்வறக்கட்டளையானது நாய்களை விற்பனை செய்தும் வந்தது. இந்நிலையில் ஒருநாள் ஜெட்ஸூம்; விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜெட்ஸை வாங்கிய நபர், ஒரு சிலநாட்களில் அதனை மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிட்டார்.

இவ்வாறு ஜெட்ஸை வாங்கிச் செல்பவர்கள், அவர்களது சூழ்நிலை மாற்றத்துக்கேற்ப, ஜெட்ஸை வளர்க்க முடியாது மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிடுகின்றனர். இந்நிலையில், சுமார் 7 வருடங்களாக 14,000 பேர் ஜெட்ஸை வளர்த்து வந்துள்ளனர்.

குறித்த அறக்கட்டளையில் ஜெட்ஸூடன்;; கொண்டுவரப்பட்ட 50 நாய்களும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் ஜெட்ஸ் மாத்திரம் விற்பனையாகாது,தனிமையிலேயே இருந்து வந்துள்ளது.

ஆனால், 7 ஆண்டுகள் கழிந்த பின்பு தற்போது ஜெட்ஸ், ஒரு புதியவீட்டில் குடி புகுந்துள்ளது. குறித்த குடும்பத்தினர்,அதனை புது வருட பரிசாக வாங்கியுள்ளனர்.

'இரண்டு பேரை மாத்திரமே கொண்ட எமது குடும்பத்தில் 3ஆவது அங்கத்தவராக ஜெட்ஸைதத் தெடுத்துள்ளோம். ஜெடஸ்; இல்லையேல் வீட்டில் இருக்கமுடியாது' என்றும் அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X