Gavitha / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தையொன்று உருவாகி அது 37 முதல் 41 வாரங்களுக்கு பின்னர் பிறக்குமாயின் அது நிறைமாத குழந்தை என்றும் 37 வாரங்களுக்கு முன்னர் பிறக்குமாயின் அது குறைமாத குழந்தைதையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறிருக்கையில், 24 கிழமைகளில் பிறந்த சிசுவொன்றின் இதய துடிப்பு நின்ற பின்னரும் அரை மணித்தியாலத்துக்கு அது உயிர் பிழைத்த அதிசய சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்;த ஃபார்ஸ்டர் (வயது 25) எண்டனி (வயது 33) ஆகிய தம்பதிக்கு 24 வாரங்களில் சிசுவொன்று பிறந்துள்ளது.
பிறக்கும் போது, சிசுவின் நிறை 650 கிராம் ஆகும்.
நுரையீரல் நோய், மூளையில் இரத்தகசிவு, இரத்த தொற்று நோய் மற்றும் காதில் சீல் வடிதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளும் குறித்த சிசு பிறந்துள்ளது.
இந்நிலையில் சிசுவுக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சிசுவின் இதயத்துடிப்பு நின்றுள்ளது. செய்வதறியாத வைத்தியர்கள் சிசுவுக்கு 10 நிமிடங்கள் ஒட்சிசன் கொடுத்துள்ளனர்.
அரை மணித்தியாலத்துக்கு பின்னர் சிசுவின் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்துள்ளது.
தற்போது சிசு ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதனை வீட்டுக்கு அழைத்து செல்லமுடியும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago